22 லட்சம் இந்தியர்களின் விவரங்களை லீக் செய்தது மெக்டொனால்ட்ஸ் ஆப்

  shriram   | Last Modified : 19 Mar, 2017 07:51 pm
உலகின் மிகப்பெரிய ஹோட்டல் நிறுவனங்களுள் ஒன்றான மெக்டொனால்ட்ஸ் நிறுவனம், இந்தியாவில் பல லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. அந்த நிறுவனத்தின் மெக்டெலிவரி என்ற வீட்டு டெலிவரி வசதியின் இணைய டேட்டாபேஸ், போதிய பாதுகாப்பு இல்லாமல் இருந்ததாகவும், அதனால் கிட்டத்தட்ட 22 லட்சம் இந்திய வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடு போயிருக்கலாம் என இணைய பாதுகாப்பு நிறுவனம் 'ஃபாலிபில்' தெரிவித்துள்ளது. இதில் வாடிக்கையாளர்களின் பெயர், வீட்டு முகவரி, போன் நம்பர், சமூக வலைதள முகவரி, ஜிபிஎஸ்ஸில் வீட்டு இலக்கம் போன்றவை திருடு போயிருக்கும் என்கிறார்கள். இரண்டு பிரிவாக இருக்கும் மெக்டெலிவரி இணையதளத்தில், மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்களின் இணையதளம் தான் ஹேக் செய்யப்பட்டுள்ளதாம். இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாநில வாடிக்கையாளர்கள் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மெக்டொனால்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டு போன்ற எந்தவிதமான பண விவரங்களையும் தாங்கள் சேர்த்து வைப்பதில்லை என கூறியுள்ளது. ஆனால், ஹேக் நடந்ததை மறுக்கவில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close