6000 ஊழியர்களை வெளியேற்றுகிறது காக்னிசன்ட்

  shriram   | Last Modified : 20 Mar, 2017 07:53 am
காக்னிசன்ட் ஐ.டி நிறுவனத்தின் 6000 ஊழியர்கள் வரும் மாதங்களில் பணிநீக்கம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. "அப்ரைசல் காலத்தில், இதுபோல ஊழியர்களை பணி நீக்கம் செய்வது வழக்கம். இது காக்னிசன்ட் மட்டுமல்ல அனைத்து நிறுவனங்களிலும் நடப்பது தான்," என அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கூறினார். 2,65,000 ஊழியர்கள் கொண்டுள்ள அந்நிறுவனம், 2-3% ஊழியர்களை அப்ரைசல் நேரத்தில் பணி நீக்கம் செய்யும். ஆனால், இந்த முறை 6,000 முதல் 10,000 பேராக இது அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. "பணியாளர்களை நிர்வகிக்கும் பொருட்டில், வழக்கமாக எல்லோரையும் பரிசீலனை செய்வோம். அதில் சிலர் மாற்றம் செய்யப்படலாம். ஆனால், அது நிச்சயம் அவர்களின் செயல்திறனை பொறுத்து மட்டும் தான் இருக்கும்," என காக்னிசன்ட் சார்பில் கூறப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close