ஆண்ட்ராய்டில் களமிறங்கும் 'சூப்பர் மேரியோ'

  நந்தினி   | Last Modified : 20 Mar, 2017 07:54 pm
80-களின் மத்தியில் அனைவரின் உள்ளம் கவர்ந்த வீடியோ கேமான 'சூப்பர் மேரியோ' தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவான புதிய வீடியோ கேம்களால் மக்களின் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்மார்ட் போன்களில் விளையாடும் வகையில், புதிய சூப்பர் மேரியோ கேமை உருவாக்கியுள்ளது Nintendo என்ற அமெரிக்க நிறுவனம். இந்த வீடியோ கேம், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஆப்பிள் போன்களுக்கான ஐ.ஓ.எஸ் இயங்குதளத்தில் இயங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டுள்ள ஸ்மார்ட் போன்களில் விளையாடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு, வரும் மார்ச் 23-ஆம் தேதி சூப்பர் மேரியோ கேம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த விளையாட்டை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றாலும், அடுத்த ஸ்டேஜுக்கு போக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என கூறப்படுகிறது. ஐ.ஓ.எஸ் இயங்கு தளத்திற்கான சூப்பர் மேரியோ விளையாட்டை, இதுவரை 7.8 கோடி பேர் டவுன்லோட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close