சமூக வலைதளங்களால் வேலை வாய்ப்பு அதிகரிப்பு

  mayuran   | Last Modified : 21 Mar, 2017 09:48 pm

இந்தியாவில் பணிபுரிபவர்களில் சுமார் 32% பேர் சமூக வலைதளங்கள் மூலமே தங்கள் வேலையை தேடிக் கொண்டவர்கள் என வேலைவாய்ப்பு இணையதள நிறுவனமான லிங்க்ட் இன் தெரிவித்துள்ளது. மேலும், "நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்யும் காலம் மாறி, பணியாளர்கள் எந்த நிறுவனத்தில் நாம் வேலை செய்ய வேண்டும் என தேர்ந்தேடுக்கும் காலத்திற்கு மாறிவிட்டோம். அதாவது பணியாளர்கள், ஒரு நிறுவனத்தின் தரம், கலாச்சாரம், நிர்வாகத்திறன் என பலவற்றை ஆய்வு செய்து வேலைக்காக விண்ணப்பிக்கும் வகையில் லிங்க்ட் இன் செயல்படுகிறது. இது சமூக வலைதளங்களின் வளர்ச்சியின் ஓர் எடுத்துக்காட்டு" என லிங்க்ட் இன் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் இர்பான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close