சிவப்பு நிற ஸ்பெஷல் எடிஷன் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

Last Modified : 23 Mar, 2017 02:26 pm

ஆப்பிள் தனது ஸ்பெஷல் எடிஷனான சிவப்பு நிற iPhone 7 மற்றும் iPhone 7 Plus-ஐ நேற்று அறிமுகப் படுத்தியது. வரும் வெள்ளிக்கிழமை முதல் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனைக்கு வரும் இந்த சிவப்பு நிற ஐபோன் 128 ஜிபி, 256 ஜிபி என இரண்டு ஸ்டோரேஜ் ரகங்களில் வெளிவர உள்ளது. இந்திய சந்தையில், 82,000 ரூபாயில் இந்த மொபைல்கள் அறிமுகமாகின்றன. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்காக செயல்பட்டு வரும் RED எனும் அமைப்பு, ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பிக்கும் விதமாக இந்த சிவப்பு நிற போன்களை ஐபோன் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த போன் விற்பனையின் மூலம் கிடைக்கும் தொகையின் ஒரு பகுதியானது எய்ட்ஸ் நோய் ஆராய்ச்சிக்கான உலக நிதிக்கு அளிக்கப்பட உள்ளது. 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iPhone 7 Plus-ன் விலை 82,000 ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close