ரூ 28,900க்கு புதிய 'Ipad': ஆப்பிள் நிறுவனம் அறிமுகம்

  gobinath   | Last Modified : 22 Mar, 2017 12:05 pm
சிவப்பு நிறத்தில் ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ள ஆப்பிள் நிறுவனம், 9.7 இன்ச் அளவுள்ள புதிய iPad - ஐ அறிமுகப் படுத்தியுள்ளது. பிரகாசமான ரெட்டினா டிஸ்பிளே கொண்ட இந்த iPad இன் ஆரம்ப விலை ரூ 28,900 என அறிவிக்கப் பட்டுள்ளது. இதனிடையே, கடந்த வருடம் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட 9.7 inch, 64-bit A9X chip iPad இன் விலை ரூ 49 ஆயிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மெல்லிய அலுமினிய தகடுகளால் ஆன வெளிப்புறத்தைக் கொண்ட இந்த புதிய iPad - இன் டிஸ்பிளே 3.1 மில்லியன் பிக்சல்கள் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. A9 சிப் கொண்டு, ஆப்பிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட கம்ப்யூட்டரின் தொழில்நுட்பத்தை சார்ந்து இந்த புதிய iPad தயாரிக்கப் பட்டுள்ளது. iPad - இன் இரு புறமும் இருக்கும் கேமராக்கள் மூலம் HD வீடியோக்களை பதிவு செய்ய முடியும். அத்துடன் FaceTime வீடியோ காலிங் வசதியும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், iOS 10 இயங்குதளத்தில் இது இயங்க கூடியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆப்பிள் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துணை தலைவர் பிலிப் ஷில்லர், "Ipad', உலகின் மிகவும் பிரபலமான டாப்லட் ஆகும். ஆப்பிள் வாடிக்கையாளர்கள் 9.7 இன்ச் டிஸ்பிளேயுடன் வரும் புதிய Ipad - ஐ மிகவும் விரும்புவார்கள். தொலைக்காட்சி பார்ப்பதற்கும், படங்கள் பார்ப்பதற்கும், FaceTime வீடியோ காலிங் செய்வதற்கும் மற்றும் இணையத்தை பயன்படுத்துவதற்கும் இது சவுகரியமானதாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close