கார்பனின் புதிய 4ஜி போன்கள் Aura Sleek 4G மற்றும் Aura Note 4G

Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான கார்பன் புதிதாக இரண்டு 4ஜி ரக போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. Aura Sleek 4G மற்றும் Aura Note 4G என பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல் போன்களின் விலை முறையே ரூ.5,290 மற்றும் ரூ. 6,890 ஆகும். இந்த மொபைல்களில் உள்ள அம்சங்கள் பின்வருமாறு, Aura Sleek 4G ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த மொபைலில் 5 இன்ச் தொடுதிரை, குவாட் கோர் ப்ராசெஸ்ஸார், 1 ஜிபி RAM, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5 MP பின்பக்க கேமரா, 2 MP முன்பக்க கேமரா, டூயல் சிம், 2000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. Aura Note 4G குவாட் கோர் ப்ராசெஸ்ஸாருடன் 2 ஜிபி RAM கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் தொடுதிரை, 5 MP திறனுள்ள முன்பக்க மற்றும் பின்பக்க கேமரா, 16ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 2800mAh பேட்டரி, டூயல் சிம் போன்றவை அடங்கி உள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close