செயல்பாட்டுக்கு வந்தது பிரதமரின் வீட்டு கடன் திட்டம்

Last Modified : 23 Mar, 2017 11:03 am
கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்த நடுத்தர மக்களுக்கான வீட்டு கடன் திட்டம் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. Credit Linked Subsidy Scheme என அழைக்கப்படும் இத்திட்டத்தின் மூலம், ஆண்டு வருமானம் 12 லட்ச ரூபாய் வரை கொண்டவர்கள் வங்கிகளில் பெறும் 9 லட்ச ரூபாய் வரையிலான வீட்டு வசதி கடன்களுக்கு 4% வட்டி விலக்கு அளிக்கப் படும். அதேபோல் ஆண்டு வருமானம் 18 லட்ச ரூபாய் கொண்டவர்கள் பெறும் 12 லட்ச ரூபாய் வரையிலான கடன்களுக்கு 3% வட்டி விலக்கு அளிக்கப்படும். இந்த வட்டி விலக்கு காரணமாக மாதம் தோறும் வங்கிகளில் செலுத்த வேண்டிய கடன்களுக்கான வட்டி தொகையானது முறையே, 9 லட்ச ரூபாய் கடனுக்கு 2,062 ரூபாயாகவும், 12 லட்ச ரூபாய் கடனுக்கு 2,019 ரூபாயாகவும் குறையும். இந்த திட்டமானது முன் தேதியிட்டு ஜனவரி 1 முதல் வழங்கப்பட உள்ளதால், இந்த ஆண்டின் துவக்கத்தில் வீட்டு கடன் பெற்றவர்கள் மற்றும் பெற விண்ணப்பித்த வர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close