இரண்டு செல்ஃபி கேமரா கொண்ட Oppo F3 Plus

Last Modified : 01 Jan, 1970 05:30 am
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஓப்போ இரண்டு முன்பக்க கேமராக்களை கொண்ட Oppo F3 Plus எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோவை அடிப்படையாக கொண்ட ஓப்போவின் ColorOS 3.0 இயங்குதளத்தில் இயங்க கூடிய இந்த மொபைலில் 4ஜிபி RAM ஆக்டா - கோர் ப்ராசெஸ்ஸார் உள்ளது. இதன் முன்பக்கத்தில் 16 MP மற்றும் 8 MP திறனுள்ள இரண்டு கேமராக்கள் உள்ளன. இம்மொபைலில் உள்ள Smart Facial Recognition வசதி, இரண்டு கேமராக்களில் எந்த கேமரா புகைப்படம் எடுக்க பொருத்தமாக இருக்கும் என்பதை புகைப்படம் எடுப்பவருக்கு தெரிவிக்கும். மேலும் புகைப்படம் எடுப்பவர் தான் விரும்பும் கேமராவை தேர்வு செய்யும் வசதியும் இதில் உள்ளது. இதனை தவிர்த்து Beautify 4.0 app, Selfie Panorama, Screen Flash, மற்றும் Palm Shutter போன்ற அம்சங்களும் இதில் அடங்கி உள்ளன. மொபைலின் பின் புறத்தில் இரண்டு பிளாஷ் கொண்ட 16 MP கேமரா உள்ளது. ஹோம் பட்டனோடு பொருத்தப் பட்டுள்ள பிங்கர் பிரிண்ட் சென்சார் 0.2 நொடிகளில் போனை அன்லாக் செய்யும் திறன் வாய்ந்தது. இதில் உள்ள மற்ற அம்சங்கள் முறையே 6 இன்ச் தொடுதிரை, டூயல் நேனோ சிம், 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4G VoLTE, Micro-USB with OTG மற்றும் VOOC Flash Charge கொண்ட 4000mAh பேட்டரி ஆகியனவாகும். இந்திய மதிப்பில் 30,990 ரூபாய் விலை நிர்ணயிக்கப் பட்ட இந்த மொபைல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. மேலும் இன்று ஆரம்பிக்கும் இந்த மொபைலுக்கான முன்பதிவு வரும் 31-ஆம் தேதியோடு நிறைவடைகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close