இலவசமாக ஜியோ ப்ரைம் பெறுவது எப்படி?

Last Modified : 24 Mar, 2017 04:15 pm

வரும் 31-ஆம் தேதியோடு ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவைகள் முடிவடைய உள்ளன. இதையடுத்து தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்வதற்காக ஜியோ ப்ரைம் எனும் புது சேவையை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியது. அதன் படி 99 ரூபாயை வருட சந்தாவாக செலுத்தி இந்த ப்ரைம் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். அதன்பிறகு, 303 ரூபாய் பேக் ரீ-சார்ஜ் செய்து கொண்டால் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா ஒரு மாத காலத்திற்கு அளிக்கப்படும். தற்போது இந்த ப்ரைம் சேவையை இலவசமாக பெறுவதற்கான புதிய வழியை ஜியோ சத்தமே இல்லாமல் கொண்டு வந்துள்ளது. இதற்கு முதலில் Jio Money Wallet app-ஐ மொபைலில் இன்ஸ்டால் செய்து, உங்கள் கணக்கை அதில் துவங்க வேண்டும். அதோடு 4 இலக்க m-pin-யையும் உருவாக்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு Jio Money மூலமாக 99 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்து ஜியோ ப்ரைம் உறுப்பினராகிக் கொண்டு, 303 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட பேக் எதாவது ஒன்றை ரீ-சார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் நீங்கள் முதலில் Jio Money மூலமாக ப்ரைம் உறுப்பினராக இணைந்ததற்கு 50 ரூபாயும், உயர் மதிப்புடைய பேக் ஒன்றை ரீ-சார்ஜ் செய்ததற்காக 50 ரூபாயும் என மொத்தமாக 100 ரூபாய் திரும்ப உங்கள் Jio Money கணக்கில் Jio vouchers வாயிலாக வழங்கப்படும். இதனை தவிர்த்து PrimeJio promo code கொண்டு 303 ரூபாய் பேக் ரீ-சார்ஜ் செய்கையில் முதல் இரண்டு ரீ-சார்ஜ்களுக்கு தலா 30 ரூபாய் திரும்ப அளிக்கப்படும். அதோடு Jio Money மூலமாக இரண்டு சினிமா டிக்கெட்கள் வாங்கும் போது 150 ரூபாய் திரும்ப அளிக்கப்படும் மற்றும் 201 ரூபாய் மதிப்புள்ள Jio add-on pack இலவசமாக வழங்கப்படும்.

Advertisement:
[X] Close