விந்தணு தரத்தை வீட்டிலேயே பரிசோதிக்க...

Last Modified : 24 Mar, 2017 10:33 pm

உலகம் முழுவதும் 4.50 கோடி தம்பதிகள் மலட்டுத் தன்மை பாதிப்பால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இதில் பெரும்பாலான தம்பதிகளில், ஆணின் விந்தணு குறைபாடே குழந்தை பிறப்பின்மைக்கு காரணமாக உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள Brigham and Women's Hospital, Massachusetts General Hospital மற்றும் Harvard Medical School-ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விந்தணுவின் தரத்தை வீட்டிலேயே கண்டுபிடிப்பதற்கு வசதியாக ஸ்மார்ட்போன் மூலம் இயங்க கூடிய பரிசோதனை கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். Science Translational Medicine எனும் மருத்துவ இதழில் வெளியாகி உள்ள, இக்கருவி குறித்த கட்டுரையில், 5 நொடிகளில் வீட்டில் இருந்த படியே ஒரு ஆணின் விந்தணு தரத்தை பற்றி அறிய முடியும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில், ஒரு ஆணின் விந்தணு மாதிரியை சோதனை தட்டில் முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாதிரியை ஆப்டிகல் கருவி ஒன்றில் வைக்க வேண்டும். அந்த ஆப்டிகல் கருவியின் மீது பொருத்தப்பட்டுள்ள மொபைல் போனில் உள்ள ஆப் மூலம் கீழே இருக்கும் விந்தணுவை வீடியோ அனலைசிங் முறை மூலம் சோதனை செய்து, அதன் தரத்தை அறிந்து கொள்ளலாம். Massachusetts General Hospital Fertility Center-ல் 350 ஆண்களின் விந்தணு மாதிரிகளை இக்கருவி மூலம் சோதனை செய்ததில் 98% துல்லிய தன்மையுடன் சோதனை முடிவுகளை காட்டியுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 350 ரூபாய் மதிப்புள்ள இந்த கருவி தற்போது ஆராய்ச்சி அளவிலேயே இருப்பதாகவும், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.