முடிவுக்கு வருகிறது 10 ஆண்டு பஜாஜ் - கவாஸாகி கூட்டணி!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஜப்பான் நிறுவனமான கவாஸாகியுடன் பத்தாண்டுகளாகக் கொண்டிருந்த வர்த்தக கூட்டணி முடிவுக்கு வருவதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் அமித் நந்தி கூறுகையில், "இந்தியாவில் கவாஸாகி மற்றும் பஜாஜ் நிறுவனங்களுக்கிடையிலான விற்பனை மற்றும் சேவை தொடர்பான கூட்டணி, நடப்பு ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இந்தியா தவிர்த்து இதர நாடுகளில் இந்த இரு நிறுவனங்களுக்கு இடையிலான தற்போதைய மற்றும் எதிர்கால வர்த்தக உறவுகள் தொடர்ந்து நீடிக்கும். இது பரஸ்பர பேச்சுவார்த்தைக்குப் பிறகு எட்டப்பட்ட சுமுகமான முடிவு" என்றார். இந்தக் கூட்டணி முறிவைத் தொடர்ந்தும், கவாஸாகி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் விற்பனையை இந்தியாவில் தொடர்ந்து மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close