ஒரு வருட இலவச இன்டர்நெட் ஆஃபருடன் வெளிவரும் MoreGMax 3G6 ஸ்மார்ட்போன்

Last Modified : 27 Mar, 2017 02:07 pm
கனடா ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான Datawind, MoreGMax 3G6 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. 3ஜி ரக போனான இதில், 6 இன்ச் தொடுதிரை, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 1 ஜிபி RAM, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 MP பின்பக்க கேமரா, 2 MP முன்பக்க கேமரா, டூயல் சிம், Bluetooth, Wi-Fi, மற்றும் Micro-USB போன்றவற்றை கொண்டுள்ளது. 5,999 ரூபாய் விலை நிர்ணயிக்கப் பட்டுள்ள இந்த மொபைலின் இயங்குதளம் மற்றும் பேட்டரி திறன் குறித்த தகவலை அந்நிறுவனம் இன்னும் வெளியிட வில்லை. சிறப்பு அம்சமாக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து Datawind நிறுவனம் ஒரு வருட காலத்திற்கு இம்மொபைலுக்கு இலவச இன்டர்நெட் சேவையை வழங்க உள்ளது. மொபைலில் உள்ள UbiSurfer browser மூலமான இன்டர்நெட் பயன்பாடுகளுக்கு மட்டுமே இந்த இலவச இன்டர்நெட் அளிக்கப்படும் என்றும், audio/ video streaming மற்றும் local-downloads போன்றவற்றிற்கு இலவச இன்டர்நெட் அளிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close