ஜியோனி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனம் புதிதாக Gionee A1 எனும் 4ஜி போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ஆண்ட்ராய்டு நௌகட்டை அடிப்படையாக கொண்ட Amigo 4.0 இயங்குதளத்தில் இம்மொபைல் இயங்குகிறது. 5.5 இன்ச் தொடுதிரை, MediaTek Helio P10 (MT6755) SoC, 4ஜிபி RAM, 16 MP முன்பக்க கேமரா, 13 MP பின்பக்க கேமரா, 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4G VoLTE, டூயல் சிம் மற்றும் ultrafast charging வசதி கொண்ட 4010mAh பேட்டரி போன்ற அம்சங்களை இம்மொபைல் கொண்டுள்ளது. வரும் 31-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த மொபைலின் விலை 19,999 ரூபாயாகும்.