புதிய 2 உள்நாட்டு விமான சேவைகள்; மதுரை ஏர்போர்டில் தொடக்கம்

  mayuran   | Last Modified : 27 Mar, 2017 08:16 pm

மதுரை ஏர்போர்டில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் உள்நாட்டு சேவை மட்டும் இருந்த நிலையில், தற்போது ஜெட் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் புதிதாக நுழைந்துள்ளன. சென்னையில் இருந்து மதுரைக்கு இண்டிகோ விமான சேவையும், மதுரையில் இருந்து மும்பைக்கு நேரடி விமான சேவையை ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் ஆரம்பித்துள்ளன. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல வசதியாக இண்டிகோ சேவையும், வடமாநில சுற்றுலா பயணிகள் தென் மாவட்டங்களுக்கு எளிதாக வர ஜெட் ஏர்வேஸ் சேவையும் துவங்கப்பட்டுள்ளதாக மதுரை எம்.பி. கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close