+2 முடித்தவுடன் ஐ.டி வேலைக்கு ட்ரெய்னிங்

  shriram   | Last Modified : 27 Mar, 2017 07:37 pm
"படிச்சு முடிச்ச உடனே வேலையில சேர்ற மாதிரி ஏதாவது கோர்ஸ் இருக்கா??" என்ற கேள்வி ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் நம் காதுகளில் கேட்கும். கல்லூரி படிப்பே வேலைக்கு தான் என்ற நிலை உருவாகிவிட்டது. அதைவிட, ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற கல்லூரிகளின் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற குழந்தைகளை ட்ரெய்னிங் அனுப்பும் பெற்றோர்கள், தற்போது 4வது முதலே அட்மிஷன் பார்ம்களோடு சுற்றுகிறார்கள். இந்நிலையில், "எதுக்கு கல்லூரி சென்று 4 வருடங்கள் என்னென்னவோ படித்து பின் ஐ.டியில் வேலைக்கு சேர வேண்டும்," என்று யோசிப்பவர்களுக்காக எச்.சி.எல் நிறுவனம் புதிய ட்ரெய்னிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, அந்நிறுவனம் பள்ளி முடிக்கும் குழந்தைகளை நேரடியாக தேர்ந்தெடுத்து வேலைக்கு பயிற்சி தருகிறது. ஒரு வருடம் நடக்கும் இந்த பயிற்சி முகாமுக்கு, 85% மதிப்பெண்கள் பெரும் மாணவர்கள் எடுத்துக்கொள்ளப் படுவார்கள் (சிபிஎஸ்சி மாணவர்களுக்கு 80%). பயிற்சி முடிந்தபின் அவர்களை 1.8 லட்சம் வருட சம்பளத்துக்கு தங்கள் நிறுவனத்தில் சேர்த்துக்கொள்கிறது எச்.சி.எல். தற்போது மதுரையில் 100 மாணவர்களுடன் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கோவை எச்.சி.எல் மையத்தில் பயிற்சி கொடுக்கப்படும். இதுபோக, பட்டம் பெற விரும்பும் மாணவர்களுக்கு, விசேஷ வார இறுதி கோர்ஸ் மூலம் எஸ்.எஸ்.என் கல்லூரியில் பி.எஸ்சி பட்டம் கிடைக்கவும் எச்.சி.எல் ஏற்பாடு செய்துள்ளது. "இந்த திட்டத்தால், கல்லூரியில் படிக்க வசதி இல்லாத, திறன் வாய்ந்த மாணவர்களுக்கு, நல்ல வேலை கிடைக்க ஒரு வாய்ப்பு உண்டாகும்," என எச்.சி.எல் நிறுவனத்தின் ஸ்ரீமதி சிவசங்கர் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close