• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மரணம்
  • வாஜ்பாய் கவலைக்கிடம்... தலைவர்கள் எய்ம்ஸ் வருகை
  • பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
  • நிலக்கரி இறக்குமதி முறைகெடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை - ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு

காசநோயை கண்டுபிடிக்கும் மொபைல் ஆப்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஒரு நாளைக்கு 1,400 பேர் வீதம் ஒவ்வொரு ஆண்டும் 4,80,000 பேர் இந்தியாவில் டிபி எனப்படும் காசநோய்க்கு பலியாகின்றனர். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான மக்களை பலி வாங்கும் இந்த நோயை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ராகுல் பத்ரி எனும் இளைஞர் காச நோயை கண்டறியும் செயலி ஒன்றை உருவாக்கி உள்ளார். 'TimBre' என அழைக்கப் படும் இந்த செயலியானது, ஒரு மனிதன் இருமும் போது, அவனது இருமலின் ஒலி அளவை கணக்கிட்டு அது சாதாரண இருமலா இல்லை காசநோய் இருமலா என்பதை கண்டுபிடித்து விடும். இந்த செயலியை நமது மொபைலில் இன்ஸ்டால் செய்த பின்னர், நமது பெயர், மொபைல் எண் மற்றும் நமது மருத்துவ வரலாறு போன்றவற்றை அதில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நமது இருமல் சத்தம் அடங்கிய ஒலிப்பதிவை அதில் பதிவேற்ற வேண்டும். இந்த ஒலிப்பதிவை ஏற்கனவே உள்ள மருத்துவ தரவுகளுடன் ஆய்வு செய்து, நமது இருமல் சாதாரண இருமலா அல்லது காசநோய் இருமலா என்பதை மெசேஜ் மூலம் நமக்கு தெரியப்படுத்தும். பரிசோதனை அளவில் உள்ள இந்த செயலியானது 70 முதல் 75% வரை துல்லியமான முடிவுகளை அளித்து வருகிறது. இதனை 98 முதல் 99% வரை துல்லியமாக கணிக்க கூடிய செயலியாக மாற்றும் முயற்சியில் ராகுல் தற்போது ஈடுபட்டுள்ளார்.

Advertisement:
[X] Close