பேனசோனிக்கின் புதிய 4ஜி போன்கள் Eluga Ray Max மற்றும் Eluga Ray X

Last Modified : 01 Jan, 1970 05:30 am

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேனசோனிக் நிறுவனம் Eluga Ray Max மற்றும் Eluga Ray X எனும் இரு ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. Arbo virtual assistant தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ள இந்த இரு மொபைல்களும் ப்ளிப்கார்ட் மூலம் முதல் கட்டமாக விற்பனைக்கு வருகின்றன. Eluga Ray Max 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என இரு இன்டெர்னல் ஸ்டோரேஜ் ரகங்களில் வெளிவந்துள்ள இந்த மொபைல் 4ஜிபி RAM கொண்டது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் இயங்க கூடிய இம்மொபைலில் 16 MP பின்பக்க கேமரா மற்றும் 8 MP முன்பக்க கேமரா ஆகியவை உள்ளன. 5.2 இன்ச் தொடுதிரை கொண்ட முன்பக்கத்தின் கீழ் புறத்தில் பிங்கர் பிரிண்ட் சென்சார் அமைந்துள்ளது. இவற்றை தவிர்த்து ஆக்டா - கோர் ப்ராசெஸ்ஸார், டூயல் சிம்(மைக்ரோ + நேனோ), 4G VoLTE, Quick Charge 3.0 கொண்ட 3000mAh பேட்டரி போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. இன்டெர்னல் ஸ்டோரேஜ் ரகங்களை பொறுத்து இந்த மொபைல்களின் விலை முறையே ரூ. 11,499 மற்றும் ரூ. 12,499 ஆகும். Eluga Ray X ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட இது, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸாருடன் கூடிய 3ஜிபி RAM கொண்டது. 5.5 இன்ச் தொடுதிரை, 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 13 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, 4G VoLTE, 4000mAh பேட்டரி, டூயல் சிம்(மைக்ரோ + நேனோ), பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்றவை இதில் அடங்கி உள்ளன. இந்த மொபைலின் விலை 8,999 ரூபாயாகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.