மளிகைக் கடை ஆரம்பிக்கும் அமேசான்

Last Modified : 28 Mar, 2017 03:41 pm
இணைய விற்பனை நிறுவனமான அமேசான் இந்தியாவில் புதிதாக மளிகை கடைகளை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ப்ராஜெக்ட் எவரெஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசிடம் அனுமதி கேட்டு அமேசான் விண்ணப்பித்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக பெங்களூர் மாநகரில் மளிகை கடையை அமேசான் திறக்க உள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படாத இத்திட்டத்தினை உறுதி செய்யும் வகையில், முன்னதாக அமேசான் நிறுவன தலைவர் ஜெப் போஸோஸ், இந்தியாவில் இந்த ஆண்டு தொழில் வளர்ச்சிக்காக 5 பில்லியன் டாலர் முதலீடு செய்யப் போவதாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசின் அந்நிய முதலீட்டின் மீதான ஆர்வமே அமேசானின் இந்த புதிய திட்டத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. ஏற்கனவே, அமேசான் பேன்டரி என்ற பெயரில், மளிகை பொருட்களை வீட்டிலேயே வந்து டெலிவரி செய்யும் திட்டத்தை சென்னை உட்பட 29 நகரங்களில் அமேசான் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close