உலகின் மிக வேகமான மெமரி கார்டு

  shriram   | Last Modified : 28 Mar, 2017 05:59 pm

சோனி நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள SF-G எஸ்.டி கார்டுகளை, உலகின் வேகமான மெமரி கார்டு என கூறுகிறது. முக்கியமாக, நவீன டி.எஸ்.எல்.ஆர் கேமராக்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை நோக்கி இந்த மெமரி கார்டு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு வினாடிக்கு 299 எம்பி வேகத்தில், படங்கள், வீடியோக்கள் என அனைத்து பைல்களையும் இதில் பதிவு செய்ய முடியும். இதை வைத்து 4K, FULL HD என எல்லா வகை வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும் என்கிறது சோனி. இந்த ரக கார்டுகள், 32ஜிபி ரூ.6,700, 64ஜிபி ரூ.11,000, 128ஜிபி ரூ.19,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close