மீண்டும் வருகிறது 'டமால்' சாம்சங் நோட் 7

  mayuran   | Last Modified : 28 Mar, 2017 09:16 pm

சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டில் வெளியிட்ட கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட் போன், பல இடங்களில் வெடித்ததால், அந்நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. அந்த மொபைல் உற்பத்தியை நிறுத்தியதோடு வாடிக்கையாளர்களிடம் இருந்தும் திரும்பப் பெற்றது. இந்நிலையில் அந்த போன்களை புதுப்பித்து மீண்டும் சந்தையில் வெளியிடப்போவதாக சாம்சங் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சாம்சங் நிறுவன நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில், பேட்டரியில் ஏற்பட்ட பழுது காரணமாகவே போன்கள் வெடித்தது என கண்டறிந்தனர். பேட்டரியினை தவிர்த்து மொபைல் போனில் எந்த குறைப்பாடும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது பேட்டரி பிரச்சனை சரி செய்யப்பட்டு, சாம்சங் கேலக்ஸி S8 அறிமுகமாகவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக கேலக்ஸி நோட் 7 வெளியிடப்படும் என கூறுகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close