வாஷிங்டனுக்கு ஏர் இந்தியாவின் நேரடி விமான சேவை

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ உள்ளிட்ட நகரங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் விமான சேவையினை வழங்கி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் தலைநகருக்கு நேரடியான விமான சேவை வழங்கப்படாமலே இருந்தது. இந்நிலையில் இந்திய தலைநகரில் இருந்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு வரும் ஜூன் 7 ஆம் தேதி முதல் நேரடி விமான சேவையினை ஏர் இந்தியா வழங்கவுள்ளது. இந்த நேரடி விமான சேவை வாரத்தில் மூன்று முறை இருக்கும் என்றும் அறிவித்துள்ளது . இதற்கான முன்பதிவு கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close