உலகின் 2-வது பணக்காரராக மாறும் அமேசான் தலைவர்

  jerome   | Last Modified : 30 Mar, 2017 07:40 pm

ஆன்லைன் மூலம் நடந்து வரும் பொருட்கள் விற்பனைகளில் அமேசான் நிறுவனம் தனக்கான முத்திரையை பதித்துள்ளது. இப்போது அதன் தலைவர் ஜெஃப் பெஜோஸ் உலக பணக்காரர்கள் வரிசையில் 2-வது இடம் பிடித்துள்ளதாக அமெரிக்காவின் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அமேசான் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் கோடி. மேலும் அமேசான், மத்திய கிழக்கு நாடுகளில் செயல்பட்டு வரும் இன்னொரு ஆன்லைன் விற்பனை நிறுவனமான Souq.com யை வாங்க திட்ட மிட்டுள்ளது. அதை வாங்கினால் அமேசானின் மதிப்பு இன்னும் ரூ. 70 ஆயிரம் கோடி அதிகரிக்கும். இதன் மூலம் அமேசான் சி.இ.ஓ ஜெஃப் பெஜோஸ், சீனாவைச் சேர்ந்த எஸ் எஃப் விமான சேவை நிறுவனர் வேங் வெய் மற்றும் ஃபேஸ் புக் நிறுவனர் மார்க் ஆகியோரை விட முன்னிலையில் வருவார். உலக பணக்காரர்கள் வரிசையில் பில் கேட்ஸ் ரூ. 5.5 லட்சம் கோடிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close