ஜியோ இலவச ஆஃபர் கிடைக்க செய்ய வேண்டியவை

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரை சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது. இதன்படி ஜியோ இதுவரை கொடுத்த இலவச ஆஃபர்களை பெற பின்வருமாறு செய்யவேண்டும்: 1. வரும் 15ஆம் தேதிக்குள் ஜியோவின் ப்ரைம் சேவையை 99 ரூபாய் கொடுத்து பெற வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 303 ரூபாய் கொண்ட மாத சேவையை பெறவேண்டும். இந்த இரண்டு திட்டங்களையும் பெற்றால் மட்டும் தான் 3 மாதங்களுக்கு, அதாவது ஜூன் 30ஆம் தேதி வரை ஜியோவின் இலவச சேவைகள் நீட்டிக்கப்படும். 2. ஏற்கனவே ரூ149 அல்லது ரூ.96 போன்ற திட்டங்களுக்கு ரீசார்ஜ் செய்தவர்கள், தற்போது 303க்கு ரீசார்ஜ் செய்தால் மட்டும் தான் 3 மாத ஆஃபர் கிடைக்கும். 3 மாதங்கள் இலவச சேவை முடிந்த பிறகு, முன்னதாக ரீசார்ஜ் செய்த அதே திட்டம் ஜூலை மாதம் அமல்படுத்தப்படும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close