3 ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட புதிய Moto G5

Last Modified : 05 Apr, 2017 08:38 am

புது டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் லெனோவோ நிறுவனம் Moto G5 எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தைக்குள் அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்பல் மற்றும் தங்க நிறங்களில் வெளிவந்துள்ள இந்த மொபைல் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் இயங்க கூடியது. 5 இன்ச் தொடுதிரை, 3ஜிபி RAM, 16ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், பிங்கர் பிரிண்ட் சென்சார், 13 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, 4G VoLTE, பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 2800mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. அமேசான், அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் கிண்டில் ஆப் போன்றவை இதில் உள்ளடக்கமாகவே இருக்கின்றன. Moto G5 Plus-ல் இருப்பது போல் Moto Display, Actions, twist gesture, மற்றும் One Button Nav mode போன்றவையும் இந்த மொபைலில் இடம் பெற்றுள்ளன. இந்த மொபைலின் விலை 11,999 ரூபாயாகும். அமேசானில் HDFC கிரெடிட் கார்டு மூலம் Moto G5-ஐ வாங்கும் போது 1000 ரூபாய் கேஷ்பேக் அளிக்கப்படும். இதேபோல் பழைய போன்கள் கொடுத்து எக்ஸ்சேஞ் ஆஃபரில் இதனை வாங்கும் போது கூடுதலாக 500 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். மேலும் 16 ஜிபி SanDisk மெமரி கார்டு இலவசமாக வழங்கப்படும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.