வரும் ஜூலை மாதத்தில் இருந்து சரக்கு சேவை வரியை அமல்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. இந்நிலையில் வரையறுக்கப்பட்டுள்ள GST மசோதாவில், எக்ஸ்சேஞ் ஆஃபர் மூலம் வாங்கும் பொருளுக்கு முழு வரி விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, 24,000 ரூபாய் பொருளை எக்ஸ்சேஞ் ஆஃபரில் 20,000 ரூபாய் கொடுத்து வாங்கினால் கூட, 24,000 ரூபாய்க்கான வரியை தான் கட்ட வேண்டும் என விதித்துள்ளனர். பைக், கார், மொபைல் போன் முதல் வீட்டு மின் சாதனங்கள் வரை பல மக்கள் எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதால் இது ஆயிரக்கணக்கானோரை நேரடியாக பாதிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.