அதிரடியாக மார்க்கெட்டுக்குள் நுழைந்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு காய்ச்சல் கொடுத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அடுத்ததாக புதிய DTH செட் டாப் பாக்ஸை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் மாதிரி ஒன்று இணையதளத்தில் லீக்காகி உள்ளது. 50 HD சேனல்கள் உட்பட சுமார் 360 சேனல்களை வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வழங்குகிறது. அதுபோக 7 நாட்களுக்குள்ளான நிகழ்ச்சிகளை மறுபடியும் பார்க்கும் வசதியும் இதில் உண்டு. மொபைலை போல், ஜியோ DTH-இலும் துவக்க ஆஃபராக 90 நாட்களுக்கு இலவச சேவைகளை கிடைக்கும். 180 ரூபாயிலிருந்து DTH பேக்குகளின் விலை துவங்குகின்றன.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.