வாடிக்கையாளர்களுக்கு 450 கோடி ரூபாய் கொடுக்கும் அமேசான்!!

  shriram   | Last Modified : 05 Apr, 2017 01:43 pm

இணையதள ஷாப்பிங் நிறுவனம் அமேசான், அனுமதியில்லாமல் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து பணம் எடுத்த விவகாரத்தில் நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியுள்ளது. 2011 முதல் 2016 வரை, குழந்தைகள் விளையாடும் கேம்ஸ் மூலம் அனுமதியில்லாமல் சில பரிவர்த்தனைகள் நடந்து பல வாடிக்கையாளர்கள் பணத்தை அந்த நிறுவனத்திடம் இழந்துள்ளனர். இந்த விவகாரத்தை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், அந்நிறுவனம் எடுத்த பணத்தை வாடிக்கையாளர்களிடம் திருப்பி கொடுக்குமாறு கடந்த வருடம் உத்தரவிட்டது. சுமார் 450 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்கு பதில், கிஃப்டு கார்டுகள் கொடுக்க அமேசான் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டது. ஆனால், நீதிபதி மறுத்துவிட்டார். எனவே இந்த தொகையை விரைவில் அமேசான் கொடுத்துவிடும் என அமெரிக்க வர்த்தக ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
[X] Close