வாட்ஸ் ஆப், பேஸ்புக்கிற்கு கட்டுப்பாடு

Last Modified : 01 Jan, 1970 05:30 am

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வாட்ஸ் ஆப் செயலியின் தனி நபர் கொள்கை தொடர்பான வழக்கு விசாரணையின் போது வாட்ஸ் ஆப், பேஸ்புக், வீ சாட் போன்றவற்றிக்கு அரசு விதித்துள்ள ஒழுங்குமுறைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, "வாட்ஸ் ஆப், பேஸ்புக், வீ சாட், ஸ்கைப் போன்ற செயலிகள் 2000-ஆம் ஆண்டு தகவல்தொடர்பு சட்டத்தின் சில ஒழுங்குமுறைகளின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளும் இவற்றிக்கு விதிக்கப்பட வில்லை. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போல் இவையும் போன் அழைப்புகள், குறுந்தகவல்கள் போன்ற சேவையினை வழங்குவதால் விரைவில் இவற்றுக்கான ஒழுங்குமுறை கட்டமைக்கப்படும்," என தெரிவித்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததோடு 5 நீதிபதிகள் கொண்ட மற்றொரு அமர்விற்கும் இவ்வழக்கை மாற்றம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close