தங்கம் விலை உயர ஜிஎஸ்டி காரணமா?

Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகிலேயே அதிக அளவில் தங்கத்தை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 10% இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. மேலும் இதனுடன் 1% மதிப்பு கூட்டு வரி மற்றும் 1% கலால் வரியும் விதிக்கப் படுகிறது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் தங்கத்தினை 12% வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கொண்டு வரப்பட்டால் ஜிஎஸ்டி வரியோடு, இறக்குமதி வரியும் இணைந்து தங்கத்தின் மீதான வரி அளவை பன்மடங்கு உயர்த்தி விடும். இதனால் தங்கத்தின் விலை உயர்வதோடு, கள்ளச்சந்தை மூலமாக தங்கத்தை இறக்குமதி செய்வதும் அதிகமாகும். இது தங்க விற்பனையை பெருமளவில் பாதிக்கும் என தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close