ஜியோ ஆஃபர் ரத்து??

  shriram   | Last Modified : 06 Apr, 2017 11:11 pm
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கிய 'சம்மர் சர்ப்ரைஸ்' இலவச ஆஃபரை உடனடியாக ரத்து செய்ய இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் (TRAI) உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஜியோ ஏற்றுக் கொண்டுள்ளது. ஜியோவின் ப்ரைம் சேவையை பெற மார்ச் 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு வரவேற்பு அதிகம் இருந்ததால், மேலும் 15 நாட்கள் அதை நீட்டிப்பதாக ஜியோ கூறியது. அதுமட்டுமல்லாமல், 99 ரூபாய்க்கு ப்ரைம் பெற்றுவிட்டு, 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 3 மாதங்களுக்கு இலவச கால், தினம் 1 ஜிபி டேட்டா வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஜியோ வழங்கிவரும் இலவச ஆஃபர்களால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாக இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட்டமைப்பு ட்ராயிடம் வாதிட்டுள்ளது. சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரையும், ப்ரைம் திட்டத்தை பெற நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தையும் ரத்து செய்யுமாறு ட்ராய் ஜியோவுக்கு உத்தரவிட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த திட்டங்களை திரும்பப் பெறவுள்ளதாக ஜியோ அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பு வரை இந்த திட்டங்களைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை தொடரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close