லஞ்சத்தில் இந்தியா எந்த இடம்?

Last Modified : 07 Apr, 2017 06:42 pm
ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தொழில் துறையில் நடைபெறும் ஊழல் குறித்து ஆய்வு நடத்திய EMEIA, அது தொடர்பான தரவரிசை பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பின் படி தொழில் துறையில் லஞ்சம் மற்றும் ஊழல் அதிக அளவில் நடப்பதாக 78% பேர் தெரிவித்துள்ளனர். மேலும் 41% சதவீத இந்தியர்கள் தங்களின் பணி முன்னேற்றத்திற்காக தர்மத்திற்கு புறம்பான வழிகளை கையாள்வதாகவும், ஊதிய உயர்வுக்காக 13% இந்தியர்கள் தவறான தகவல்களை அளிப்பதாகவும் அந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக 1980 முதல் 1990 வரையிலான ஆண்டு காலகட்டத்தில் பிறந்தவர்களே இது போன்ற செயல்களில் பெரும்பாலும் ஈடுபடுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒட்டுமொத்த லஞ்ச தரவரிசை பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. உக்ரைன், சிப்ரஸ், கிரீஸ், சொல்வேனியா, கிரோட்டியா, கென்யா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் முறையே முதல் 8 இடங்களை பிடித்துள்ளன. கடந்த ஆண்டு 6-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 9-வது இடத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close