ஜியோவின் அடுத்த அதிரடி சலுகை

  shriram   | Last Modified : 11 Apr, 2017 06:21 pm

சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில், 3 மாதங்களுக்கு வெறும் 303 ரூபாய்க்கு இலவச சலுகைகளை கொடுத்த ஜியோவின் திட்டத்தை தொலைத் தொடர்பு ஆணையம் ட்ராய் ரத்து செய்ய உத்தரவிட்டது. தற்போது மீண்டும், வேறு பெயரில் அதே ஆஃபரை வழங்க ஜியோ முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. லீக்கான தகவல்களின் படி, ப்ரைம் சலுகை பெற்றவர்கள் 309 ரூபாய் கொடுத்தால், சுமார் 3 மாத காலத்திற்கு இலவச கால், எஸ்.எம்.எஸ் மற்றும் தினம் 1 ஜிபி டேட்டா பெறமுடியுமாம். புதிதாக வரும் வாடிக்கையாளர்கள் ப்ரைமுடன் சேர்த்து இதைப்பெற 408 ரூபாய் கொடுக்க வேண்டும். 'டன் டனா டன்' என இந்த சலுகைக்கு பெயரிட்டுள்ளார்களாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close