ஜியோக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெலின் 'இன்டர்நெட் டிவி'

Last Modified : 12 Apr, 2017 05:42 pm
ஆண்ட்ராய்டில் இயங்கும் முதல் DTH set-top box டிவியை ஏர்டெல் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியது. 'இன்டர்நெட் டிவி' என அழைக்கப்படும் இந்த டிவியில் 500-க்கும் மேற்பட்ட சாட்டிலைட் தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமல்லாது நெட்ப்ளிக்ஸ், கூகுள் ப்ளே ஸ்டோர், கூகுள் ப்ளே மியூசிக், கூகுள் ப்ளே கேம்ஸ் மற்றும் யுடியூப் போன்றவை உள்ளடங்கி உள்ளன. இதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது இணையதள நிகழ்ச்சிகளையும் உங்கள் டிவி-யிலேயே காணலாம். மேலும் இதில் உள்ள இன்பில்ட் க்ரோம்சாட் மூலமாக மொபைல் போன் மற்றும் டேப்லெட் போன்றவற்றை தொலைக்காட்சியுடன் இணைக்க முடியும். நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகளை pause, record மற்றும் rewind செய்து பார்க்கும் வசதியும் இதில் உள்ளது. 3 மாத சப்ஸ்க்ரிப்ஷன் உடன் 4,999 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த டிவி இன்று முதல் அமேசானில் விற்பனைக்கு வருகிறது. அறிமுக ஆஃபராக செட்-ஆப் பாக்ஸ் உடன் 7,999 ரூபாய் செலுத்தி ஒரு வருடத்திற்கான சப்ஸ்க்ரிப்ஷனை பெற்றுக்கொள்ளலாம். இதன் சிறந்த செயல்பாட்டிற்கு 4Mbps வேகம் உள்ள 4ஜி இன்டர்நெட் இணைப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close