சாம்சங் கேலக்சி S8; 10 லட்சம் பேர் முன்பதிவு

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கேலக்சி நோட் 7 போன் தோல்வியடைந்ததை அடுத்து, சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்சி S8 மூலம் மார்க்கெட்டை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. தென்கொரியாவில் இந்த போனின் முன்பதிவு கடந்த 7ஆம் தேதி துவங்கப்பட்டது. இன்றுவரை தென்கொரியாவில் மட்டும் 10 லட்சம் பேருக்கும் மேல் முன்பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் 21ஆம் தேதி தென்கொரியா, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் கேலக்சி S8 வெளியாகிறது. 6 கோடி போன்களை விற்பனை செய்ய சாம்சங் திட்டமிட்டுள்ளது. 5.8 இன்ச் டிஸ்பிளே, 12 மெகாபிக்ஸல் கேமரா கொண்ட இந்த போனின் விலை சுமார் 57,000 ரூபாய் இருக்குமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close