கோடை கால சலுகையாக ஏர் இந்தியா நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது ஏர் இந்தியாவில் பயணம் செய்பவர்கள் முதியோர்கள் சலுகை பெற இருக்கும் வயது வரம்பை 63ல் இருந்து 60ஆக குறைத்துள்ளனர். இனிமேல் 60 வயதானவர்கள் இந்த நிறுவனத்தின் சாதாரண வகுப்பு டிக்கெட் புக் செய்யும்போது 50% சலுகை பெறுவார்கள். டிக்கெட் புக் செய்யும்போது, ஆதார், லைசென்ஸ் போன்ற புகைப்படம் கொண்ட அடையாள அட்டையை காட்ட வேண்டும். இந்த சலுகை அனைத்து உள்நாட்டு சேவைகளுக்கும் உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.