ரெயின்போ லைட் மற்றும் ஸ்மார்ட் கீ கொண்ட Honor Bee 2

Last Modified : 01 Jan, 1970 05:30 am
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Honor Bee மொபைலின் வெற்றியை தொடர்ந்து Honor Bee 2 எனும் புதிய ஸ்மார்ட்போனை Huawei மொபைல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ரெயின்போ லைட் மற்றும் ஸ்மார்ட் கீ போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. பின்பக்க கேமராவை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வட்டவடிவ ரெயின்போ லைட்டானது போன் கால் மற்றும் மெசேஜ்கள் வரும் போது ஒளிர கூடியவை. மொபைலில் உள்ள செயலிகளை ஒரே நொடியில் இயக்க வசதியாக ஸ்மார்ட் கீ பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு லாலிபாப்பை அடிப்படையாக கொண்ட Emotion UI 3.1 OS-ல் இயங்க கூடிய இந்த மொபைலில், 4.5 இன்ச் தொடுதிரை, 1ஜிபி RAM, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 5 MP பின்பக்க கேமரா, 2 MP முன்பக்க கேமரா, டூயல் சிம், 2100mAh பேட்டரி மற்றும் 4G VoLTE போன்ற அம்சங்களும் உள்ளன. இந்த மொபைலின் விலை 7,499 ரூபாய் மட்டுமே.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close