• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

இந்தியாவுக்கு வந்தது HTC Vive VR

  shriram   | Last Modified : 21 Apr, 2017 06:05 pm

3டி படங்களுக்கு பிறகு தற்போது விர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் வி.ஆர் தான் வீடியோ தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய புரட்சி செய்து வருகிறது. ஆக்குலஸ் நிறுவனம் முதலில் கம்ப்யூட்டருடன் இணைந்து செயல்படும் வி.ஆர் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியது. வீடியோ இருக்கும் இடத்திற்கே நம்மை கொண்டு செல்லும் அட்டகாசமான அனுபவம் இதன்மூலமாக கிடைக்கும். சுமார் 80,000 ரூபாய் மதிப்பில் வெளியான ஆக்குலஸ் நிறுவன வி.ஆர் கண்ணாடிக்கு போட்டியாக எச்.டி.சி நிறுவனம் தனது வைவ் கண்ணாடியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.92,990க்கு அமேசான் நிறுவனத்தில் நாளை முதல் வைவ் பெற ஆடர்கள் செய்யலாம். இதுபோக சோனி நிறுவனம் தனது பிளேஸ்டேஷனுடன் வி.ஆர் கண்ணாடிகளை முன்னதாக அறிமுகப்படுத்தியது. அதன் விலை ரூ42,000. ஆக்குலஸ் மற்றும் வைவ் ரக கண்ணாடிகள் வேலை செய்ய சுமார் 80,000 ரூபாய் விலையில் நவீன கம்ப்யூட்டர்கள் வாங்க வேண்டும். ஆனால், சோனியின் பிளேஸ்டேஷன் வி.ஆர் வேலை செய்ய, சுமார் 30,000 மதிப்பில் பிளேஸ்டேஷன் வாங்கி அதை உங்கள் டிவியில் கனெக்ட் செய்தால் போதும்.

Advertisement:
[X] Close