ரூ.50 தண்ணீர் பாட்டில்; ஐநாக்ஸ் தியேட்டருக்கு அபராதம்!!

  shriram   | Last Modified : 23 Apr, 2017 10:21 pm
தண்ணீர் பாட்டிலில் போட்டிருக்கும் எம்.ஆர்.பி விலைக்கு மேல் வாங்கியதற்காக ஹைதராபாத் நுகர்வோர் கூட்டமைப்பு, அங்குள்ள ஐநாக்ஸ் தியேட்டர் மீது 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. விஜய் கோபால் என்ற ஒரு சமூக ஆர்வலர், கடந்த வருடம் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றபோது, தன்னை தண்ணீர் பாட்டில் கொண்டு செல்ல நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்றும், அங்கு 20 ரூபாய் மதிப்புள்ள தண்ணீர் பாட்டிலை 50 ரூபாய்க்கு விற்றதாகவும் புகார் அளித்தார். இதையடுத்து இந்த விவகாரத்தை விசாரித்த ஹைதராபாத் நுகர்வோர் கூட்டமைப்பு, ஒரே பொருளுக்கு இரண்டு எம்.ஆர்.பி இருக்க முடியாது. இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என அந்த தியேட்டருக்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும், இலவச தண்ணீர் கொடுக்கவும் அவர்கள் தியேட்டர்களை வலியுறுத்தினர். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஹைதராபாத்தில் உள்ள இரண்டு ஹோட்டல்கள் மீது எம்.ஆர்.பி விலைக்கு அதிகமாக கட்டணம் வாங்குவதாக அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close