iVoomi-ன் 2 புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் Me 1 மற்றும் Me 1+

Last Modified : 01 Jan, 1970 05:30 am

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான iVoomi, Me 1 மற்றும் Me 1+ எனும் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் இயங்க கூடிய இந்த இரண்டு மொபைல்களும் ஆண்ட்ராய்டு நௌகட்டிற்கு அப்க்ரேட் செய்து கொள்ளும் வசதி கொண்டவை. 5 இன்ச் தொடுதிரை, டூயல் சிம், 4G VoLTE, 3000mAh பேட்டரி, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 1 ஜிபி RAM போன்ற அம்சங்களை இந்த இரண்டு மொபைல்களும் கொண்டுள்ளன. இதனை தவிர்த்து, கேமராவை பொருத்த மட்டில் Me 1-ல் 5 MP திறனுள்ள முன் பக்க மற்றும் பின் பக்க கேமராக்கள் உள்ளன. Me 1+ போனில் 8 MP திறனுள்ள பின்பக்க கேமரா மற்றும் 5 MP திறனுள்ள முன்பக்க கேமரா உள்ளது. Me 1-ல் 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் Me 1+ -ல் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. Me 1 போனின் விலை 3,999 ரூபாயாகவும், Me 1+ போனின் விலை 4,999 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close