5 புதிய ஐமேக்ஸ் தியேட்டர்கள்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்தியாவிலேயே மிகப்பெரிய மல்டிப்ளெக்ஸ் குடும்பமான பி.வி.ஆர், அமெரிக்காவின் ஐமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 5 நகரங்களில் ஐமேக்ஸ் திரையரங்குகளை அமைத்துள்ளது. தற்போது புதிதாக 5 ஐமேக்ஸ் திரைகளை துவங்க அந்த நிறுவனத்துடன் பி.வி.ஆர் ஒப்பந்தம் போட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய திரை என கருதப்படும் ஐமேக்ஸில், சாதாரண தியேட்டர்களை விட 3 முதல் 4 மடங்கு வரை பெரிய திரையில் படம் பார்க்க முடியும். இதனால், படம் பார்ப்பவர்களுக்கு நிஜமாகவே படத்திற்குள் இருப்பது போல தோன்றும். இதற்காக பிரத்யேக கேமரா மூலம் படம் எடுக்கும் தொழில்நுட்பத்தையும் ஐமேக்ஸ் வைத்துள்ளது. இந்தியாவில் சென்னை உட்பட 11 ஐமேக்ஸ் திரைகள் உள்ளன. டெல்லி மற்றும் 4 பெரிய நகரங்களில் இந்த புதிய தியேட்டர்களை 2019க்குள் அமைக்கவுள்ளதாக பி.வி.ஆர் தெரிவித்துள்ளது. இதற்காக அந்நிறுவனம் 50 கோடி ரூபாய் வரை செலவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close