1 ரூபாயில் தங்கம்; பேடிஎம் புதிய திட்டம்!

  shriram   | Last Modified : 28 Apr, 2017 04:22 am
அக்ஷய திரிதியை முன்னிட்டு இணைய வர்த்தக மற்றும் வாலெட் நிறுவனம் பேடிஎம், தங்கம் வாங்க, விற்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ரூ.1 முதல் பேடிஎம்மில் 24 கேரட் 999.9 தரத்தில் தங்கம் வாங்கலாம். அதை பாதுகாப்பாக பேடிஎம் பெட்டகத்தினுள் வைத்துக்கொள்ளலாம், வர்த்தகம் செய்யலாம், அல்லது வீட்டிற்கே நாணயங்கள் வடிவில் டெலிவரி செய்து கொள்ளலாம். இதற்காக பேடிஎம், MMTC-PAMP என்ற நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்தியாவின் அரசு கனிம வள நிறுவனமான MMTC, பிரசித்தி பெற்ற ஸ்விட்சர்லாந்தின் தங்க நிறுவனம் PAMP-உடன் இணைந்து நடத்தும் கூட்டணி தான் இது. அக்ஷய திரிதியை அன்று இந்த திட்டம் துவங்குவதால், இதற்கு கடும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "முதலீடு செய்வதில் இந்தியர்கள் என்றும் தங்கத்தை தான் விரும்புவார்கள். இந்த திட்டத்தின் மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள், உலகத்தரம் வாய்ந்த தங்கத்தை, சந்தையின் விலையில் வாங்கவும், விற்கவும் முடியும். தங்க முதலீட்டை எளிதாக்க தான் இந்த திட்டம்," என்று பேடிஎம் தலைவர் ஷேகர் ஷர்மா கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close