சாலை பாதுகாப்பிற்கான வோடாஃபோனின் புதிய செயலி

Last Modified : 01 Jan, 1970 05:30 am

தொலைத்தொடர்பு நிறுவனமான வோடாஃபோன், SaveLIFE Foundation எனும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சாலை பாதுகாப்பிற்கான செயலி ஒன்றை உருவாக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. 'Road safe' என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி சாலை பாதுகாப்பு தகவல்கள் மற்றும் அவசர உதவி சேவை போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதில் உள்ள 'Distraction Free Driving' எனும் அம்சமானது வாகனம் மணிக்கு 10 கிமீ வேகத்தில் செல்லும் போது வரும் மொபைல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவற்றை தானாகவே துண்டித்து விடும், மேலும் அதுகுறித்த தகவலையும் புஷ் நோட்டிபிகேஷன் மூலம் அனுப்பி விடும். மேலும் இதன் 'Automatic Crash Detector' அம்சமானது வாகனத்தின் வேகத்தில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து அதற்கு ஏற்ப அறிவுரைகளை வழங்கும். இவற்றை தவிர்த்து சாலை பாதுகாப்பு அறிவுரைகள், சாலை விதிமீறல்கள் மற்றும் அவற்றிகான மாநில வாரியான அபராதம் குறித்த தகவல்களையும் இது கொண்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் வெளிவந்துள்ள இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.