ரூ.2,311 கோடி நஷ்டமடைந்த ஓலா நிறுவனம்...!

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பெங்களூரைச் சேர்ந்த ஓலா நிறுவனம் கடந்த நிதியாண்டில் மொத்தமாக ரூ.2,311 கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. அதிக விளம்பரங்கள், சலுகைகள் மற்றும் பணியாளர்கள் கட்டணங்களால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த உபர் கார் சேவையுடனான போட்டியை சமாளிக்க ஓலா கூடுதலாக செலவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நஷ்டம் ஏற்பட்டிருந்தாலும், வருமானம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. கடந்த 2014-15ஆம் ஆண்டின் கணக்குப்படி, ரூ.103 கோடியாக இருந்த வருமானம், இந்த நிதி ஆண்டில் ரூ.758 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போது 119 நகரங்களில் இயங்கி வரும் ஓலாவை ஒப்பிடுகையில், உபர் நிறுவனம் வெறும் 29 நகரங்களில் மட்டுமே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close