அமெரிக்காவில் 10,000 பேருக்கு வேலை: இன்ஃபோஸில் அறிவிப்பு

  shriram   | Last Modified : 02 May, 2017 04:21 pm
சர்வதேச அளவில் புகழ் பெற்ற இந்திய ஐ.டி நிறுவனமான இன்ஃபோஸில், வரும் ஆண்டுகளில், அமெரிக்காவில் 10,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் இந்திய ஊழியர்கள் பணிபுரிவதை தடுக்க, விசா கட்டுப்பாடுகள் போன்ற பல முயற்சிகளை அந்நாட்டு அரசு எடுத்துவருகிறது. இந்நிலையில், டிரம்ப் தலைமையிலான அந்நாட்டு அரசிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக இன்ஃபோஸில் இவ்வாறு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்ஃபோஸில் நிறுவனத்தின் வருமானத்தில் 60% அமெரிக்க கம்பெனிகளில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 4 புதிய தொழிற்சாலைகள் உருவாக்கி அதில் AI எனப்படும் சுயமாய் சிந்திக்கும் மென்பொருள் பற்றிய ஆய்வு நடத்தவுள்ளார்களாம். இந்த பணிகளில் வரும் 2021ஆம் ஆண்டுக்கு முன் 10,000 அமெரிக்கர்களுக்கு வேலை கிடைக்கும் என்கின்றனர். முதல் தொழிற்சாலையை இண்டியானா மாகாணத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் திறக்கவுள்ளதாக இன்ஃபோஸில் தலைவர் விஷால் சிக்கா தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close