7 புதிய குடோன்கள்; 4000 புதிய வேலைகள்

  shriram   | Last Modified : 02 May, 2017 10:29 pm

இந்தியாவில் தனது வியாபாரத்தை அதிகரிக்க, அமேசான் நிறுவனம் புதிதாக பெரிய திட்டங்களை தீட்டி வருவதாக அதன் தலைவர் ஜெப் பெஸோஸ் கூறியிருந்தார். அதன்படி புதிதாக சுமார் 30,000 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளது அந்நிறுவனம். 7 புதிய குடோன்களை உருவாக்கி அதன் மூலம் சுமார் 4000 பேருக்கு வேலை தரவுள்ளதாக தெரிகிறது. கடந்த மாதம் 7 புதிய குடோன்கள் துவங்குவதாக அமேசான் அறிவித்திருந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பையும் சேர்த்து மொத்தம் 41 குடோன்கள் இந்தியாவில் வரும் ஜூன் இறுதியில் இருக்கும் என அமேசானின் அகில் சக்சேனா கூறினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close