உலகின் மிகச் சிறிய 4ஜி ஆண்ட்ராய்டு போன்

Last Modified : 03 May, 2017 05:53 pm

யுனிஹெர்ட்ஸ் எனும் நிறுவனம் உலகின் மிகச்சிறிய 4ஜி வசதி கொண்ட ஆண்ட்ராய்டு போனை உருவாக்கி உள்ளது. ஜெல்லி என பெயரிடப்பட்டுள்ள இந்த போனானது ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் இயங்க கூடியது. உள்ளங்கை அளவே உள்ள இந்த போனில் 2.45 இன்ச் தொடுதிரை, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 8 MP பின்பக்க கேமரா, 2 MP முன்பக்க கேமரா, டூயல் நேனோ சிம், 4G வசதி மற்றும் 950mAh பேட்டரி போன்றவை அடங்கி உள்ளன. 1ஜிபி RAM, 8ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட 'ஜெல்லி'-யின் விலை இந்திய மதிப்பில் சுமார் 7 ஆயிரம் ரூபாயாகும். 2ஜிபி RAM, 16ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட 'ஜெல்லி ப்ரோ'-வின் விலை இந்திய மதிப்பில் சுமார் 7 ஆயிரம் ரூபாயாகும். இந்த மொபைலை ஆகஸ்ட் மாதம் முதல் விற்பனைக்கு கொண்டு வர யுனிஹெர்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Advertisement:
[X] Close