• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

கே.எப்.சி-யுடன் போட்டி போடும் பதஞ்சலி...!!

  shriram   | Last Modified : 05 May, 2017 06:18 pm

பதஞ்சலி நிறுவனத்தின் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட்டு வருகிறார் யோகாகுரு பாபா ராம்தேவ். கடந்த வருடம் அந்நிறுவனத்தின் வருவாய் 10,561 கோடி ரூபாயாம். இந்நிலையில், இந்த வருடத்தில் அதை இரண்டு மடங்காக்க பதஞ்சலி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. "வரும் இரண்டு வருடங்களில் பதஞ்சலி தான் இந்தியாவின் மிகப்பெரிய சுதேசி (உள்நாட்டு) நிறுவனமாக உருவெடுக்கும். எங்கள் வருவாயை பார்த்து வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமூச்சு விடுவார்கள்," என ராம்தேவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும், வருவாயை இரட்டிப்பாக்க பதஞ்சலி, இந்தியா முழுவதும் ஹோட்டல் வியாபாரத்தை கையில் எடுக்க உள்ளது. ஏற்கனவே, பதஞ்சலி பல தயாரிப்புகளை கொண்டு வியாபாரம் செய்துவரும் நிலையில், இந்த ஹோட்டல் வியாபாரத்தினால், வெளிநாட்டு நிறுவனங்களான கே.எப்.சி, மெக் டொனல்ட்ஸ், சப்வே ஆகியவற்றுடன் போட்டி போட இருக்கிறது.

Advertisement:
[X] Close