வீட்டுக் கடன் மீதான வட்டி வீதம் குறைப்பு

Last Modified : 01 Jan, 1970 05:30 am

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, வீட்டுக் கடன்கள் மீதான வட்டி வீதத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி 30 லட்ச ரூபாய்க்கு கீழான வீட்டுக் கடன் மீதான வட்டி வீதம் 0.25% குறைக்கப்பட்டு 8.35%-மாக உள்ளது. இதன் மூலம் வீட்டுக் கடனுக்கான மாத தவணையில் 530 ரூபாய் வரை மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் 30 லட்ச ரூபாய்க்கு மேலான வீட்டுக் கடன் மீதான வட்டி வீதம் 0.10% குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.