72% லாபத்தை இழந்தது ஏர்டெல்

  shriram   | Last Modified : 09 May, 2017 09:19 pm
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஆஃபர்களுக்கு ஈடுகொடுக்க அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டு குறைந்த விலையில் டேட்டா கொடுத்து வருகின்றன. இதன் விளைவாக, இந்த காலாண்டில் தனது லாபம் 72% குறைந்துள்ளதாக, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் இன்று தெரிவித்தது. கடந்த வருடம், 4வது காலாண்டில் 1319 கோடி ரூபாய் எடுத்த ஏர்டெல், இந்த முறை வெறும் 373 கோடி ரூபாய் மட்டுமே காட்டுகிறது. 4வது காலாண்டு வருவாய், கடந்த வருடத்தில் 24,960 கோடி ரூபாயில் இருந்து இந்த வருடம் 21,935 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாகவும் ஏர்டெல் கூறுகிறது. "அடிமட்ட விலைக்கு புதிய நிறுவனம் சேவைகளை வழங்கி வருவதால் இரண்டாவது காலண்டாக எங்கள் வருவாய் சரிந்துள்ளது. மொத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களும் முதல்முறையாக வருவாய் சரிவை சந்தித்துள்ளன," என ஏர்டெல் இந்தியா தலைவர் கோபால் மிட்டல் கூறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close